புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராஜேந்திரபுரம் ஊராட்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 கிலா அாிசி, சீனி மற்றும் பிஸ்கட் ஆகியவற்றை கழக அமைப்புச் செயலாளரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் ராஜேந்திரபுரம் ஊராட்சியைச் சார்ந்த 1000 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளர் குழ.சண்முகநாதன், அறந்தாங்கி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் க.ராஜ்குமார், எருக்கலக்கோட்டை பன்னீர், கொடிவயல் அடைக்கலம், ஆயிங்குடி வினோத் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.





















No comments:
Post a Comment