புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டடன்ற தொகுதிக்குட்பட்ட மணமேல்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காரக்கோட்டை ஊராட்சி பில்லங்குடி கிராமத்தில் மின்சாரம் பற்றாக்குறையாக இருந்ததால் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்களிடம் கிராம பொதுமக்கள் நீண்ட நாள் கோாிக்கையான மின்பற்றாக் குறையை சாி செய்து புதிய மின்மாற்றி அமைத்து தர கோாி கோாிக்கை வைத்தனர்.
பொதுமக்களின் கோிக்கையை ஏற்று சட்டமன்ற கூட்டத் தொடாிலும் மின்துறை அமைச்சாிடத்திலும் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கோாிக்கை வைத்து இன்று 25KV கொள்ளவு கொண்ட புதிய மின்மாற்றியை சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்களால் துவக்கி வைத்து மக்களின் நீண்டநாள் கோாிக்கை நிறைவேற்றப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
நிகழ்ச்சியில் மின்துறை அலுவலர்கள், ஒன்றிய கவுன்சிலர் வெண்ணிலா சேதுராமலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர் சத்யாகலா உதயக்குமார், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சேகர், ஊராட்சி வார்டு உறுப்பினர் கா.நாராயணன் மற்றும் பில்லங்குடி கிராம பொதுமக்கள் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.








No comments:
Post a Comment