புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே ஏம்பல் கிராமத்தில் நாகூரான் என்பவரது 7 வயது சிறுமி கானாமல் போய் பின் விசாரணையில் அதே கிராமதர்தைச் சார்ந்தவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ. இரத்தினசபாபதி அவர்கள் நோில் சென்று சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிவிட்டு கிராம மக்களை அழைத்து குற்றவாளிக்கு தகுந்த தண்டணை வாங்கி தரப்படும் என்று ஆறுதல் கூறினார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது ஆழ்ந்த இரங்களையும், அனுதாபங்களையும் தொிவித்ததோடு முதலமைச்சாின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.




No comments:
Post a Comment