புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், ஆவுடையார்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 111 மாணவர்களுக்கும், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 110 மாணவிகளுக்கும் சேர்த்து ஆக மொத்தம் 221 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணிணிகளை மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமாகிய இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் தலைமையேற்று வழங்கினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஆவுடையார்கோவில் ஒன்றிய கழக செயலாளர் சி.செல்லக்கன்னு அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். விழாவில் PTA தலைவர், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயராஜ், ஒக்கூர் மஜீத், முனியசாமி, கணேசன், கதிராமங்கலம் மாாிமுத்து, சோலைமலை கருப்பையா, சண்முகம், சரவணன், லெனின், கண்ணாக்கூர் செல்வக்குமார், மருதமுத்து, பள்ளி தலைமை ஆசிாியர்கள், ஆசிாியர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.











No comments:
Post a Comment