Wednesday, 20 June 2018

மீனவர்கள் மீட்பு பணியில் சட்டமன்ற உறுப்பினர்

            புதுக்கோட்டை மாவட்டம்,  கோட்டைப்பட்டிணம் சரகம் வடக்கு புதுக்குடியிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் காளிதாஸ் (35), பாலா (22) மணிகண்டன் (23), லேகேஸ்வரன் (20) ஆகிய 4 மீனவர்கள் நாட்டுப்படகுகளில் மீன்பிடிக்க சென்றனர் ஆனால் நான்கு  பேரும் ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்து போது படகு கவிழ்ந்து காணாமல் போய்விட்டர் என்ற தகவல் கேட்டதும், மாவட்ட கழக அவைத்தலைவரும் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்திசபாபதி அவர்களும், புதுக்கோட்டை மாவட்ட கழக செயலாளரும் சேர்ந்து மாவட்ட ஆட்சியாிடமும், மற்றும் மேல் அதிகாாிகளையும் தொடர்பு கொண்டு மீட்பு பணியில் ஈடுபட்டு தங்கள் சொந்த செலவில் மீனவர்களின் படகுகளுக்கு டீசல் போட்டு தேடும் பணியில் ஈடுபட்ட போது நால்வரும் மல்லிப்பட்டிணம் இருப்பதாக தகவல் அறிந்து அங்கு சென்று அவர்களை மீட்டு மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து பின் அவர்களின் வீடுகளுக்கு கொண்டுபோய் சேர்த்து அறுதல் சொல்லிவிட்டு வந்தனர். 








No comments:

Post a Comment